என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அசோக் கேலாட்
நீங்கள் தேடியது "அசோக் கேலாட்"
ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி செலவை அரசு ஏற்றது. #Rajasthangovt #farmloanwaiver
ஜெய்ப்பூர்:
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.
அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அசோக் கெலாட் தலைமையிலான அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajasthangovt #farmloanwaiver
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் கடந்த 16-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் சர்தார்புரா தொகுதியிலும், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் கடந்த 16-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் சர்தார்புரா தொகுதியிலும், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
×

X